தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/நல்லதை மட்டுமே பார்!

நல்லதை மட்டுமே பார்!

நல்லதை மட்டுமே பார்!


ADDED : செப் 20, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்வில் அடைய வேண்டிய மிகச் சிறந்த பொருள் கடவுள் மட்டுமே. அவன் துணையின்றி நம்மால் வாழவே முடியாது.

* முயற்சியுடன் செயலைத் தொடங்கினாலும், இடையூறு வரத்தான் செய்யும். லட்சியத்தை அடைந்த பிறகே அது தகர்க்கப்படும்.

* மேகத்தைக் கலைத்து சூரியன் கிளம்புகிறது. அதுபோல், இதழ் ஓரத்தில் எழும் ஒரு புன்சிரிப்பு, எவ்வளவு பெரிய சிரமத்தையும் கலைத்து விடும்.

* மனிதனிடம் நேர்மை அதிகரித்து விட்டால், செய்யும் செயல் அனைத்தும் கடவுளின் செயலாகி விடும்.

* செயலில் ஆர்வமும், விழிப்புணர்வும் இணைந்து விட்டால், நாம் லட்சியத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.

* மனிதன் எப்போதும் நல்லதை மட்டுமே காண்கின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். நல்லதைக் காணுங்கள், நல்லதைச் செய்யுங்கள்.

ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us